×

எல்.ஆர்.ஜி கல்லூரியில் ஆண்டு விழா

திருப்பூர், மார்ச் 8: திருப்பூர், எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கல்லூரியில் ஆண்டு விழா நேற்று நடந்தது. திருப்பூர், பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கல்லூரியில்  நேற்று ஆண்டு விழா நடந்தது. இந்நிகழ்வில், கல்லூரியின் முதல்வர் பொன் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். மின்ணணுவியல்துறை தலைவர் ஸ்ரீ தேவி வரவேற்றார். இதில், ஆழியார் அறிவுத்திருக்கோயிலின் அறங்காவலர் சுந்தரராஜன் பங்கேற்று கல்லூரி மாணவிகளுக்கு படிப்புடன் ஒழுக்கத்தை பேணி காப்பது குறித்து அறிவுரை வழங்கினார். மேலும், கடந்த இரண்டு நாட்களாக நடந்த விளையாட்டு போட்டிகள், கட்டுரை போட்டிகள் மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு கல்வியில் சிறந்து விளங்கிய மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர்.

Tags : ceremony ,LRG College ,
× RELATED பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் திருஞான சம்பந்தர் குரு பூஜை விழா