×

கோவையில் ஐஏஎஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி

கோவை, மார்ச் 8: கோவை ஆர்.எஸ்.புரத்தில் செயல்படும் அம்மா ஐஏஎஸ் அகாடமி சார்பில் வருகிற ஜூன் மாதம் 2ம்தேதி நடைபெற உள்ள யூ.பி.எஸ்.சி குடிமையியல் முதல்நிலை தேர்வுக்கான 3 மாதகால இலவச பயிற்சி, வரும் மார்ச் 10ம்தேதி காலை 9.30 மணிக்கு துவங்குகிறது. இலவச பயிற்சிக்காக விண்ணப்பித்துள்ள மாணவர்கள் வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நேரில் வந்து, தங்களது சேர்க்கையை உறுதிசெய்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருகிற ஜூலை மாதம் நடைபெற உள்ள குரூப் 1 முதன்மை தேர்வுக்கான பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களது பெயர், ஊர் மற்றும் கல்வித்தகுதி ஆகிய தகவலை 87606-74444 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலம் அனுப்பி முன்பதிவு செய்து, பயிற்சியில் சேரலாம். இதுதொடர்பான மேல்விவரங்களுக்கு 0422-2472222 என்ற மொபைல் எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Coimbatore ,
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்