×

ராம்கோ சிமெண்ட் நிறுவனம் சார்பில் ரூ.15 கோடியில் சமூக பணிகள்

அரியலூர், மார்ச் 8:  அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில் தி ராம்கோ சிமெண்ட் ஆலை தனக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் சுரங்கப்பணி நிறைவடைந்த 38 ஏக்கர் பகுதியை மூடி 38,000 மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறது. கோவிந்தபுரம் ராம்கோ சிமெண்ட் ஆலையின் சுரங்க மூத்த துணைப் பொதுமேலாளர்  மகேஸ் கூறியது: எங்களது ஆலைக்கு சொந்தமான புதுப்பாளையம் கிராமத்திலுள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் 38 ஏக்கர் சுரங்கப்பணி நிறைவடைந்துள்ளது. இச்சுரங்கத்தை 70 லட்சம் டன் மண் கொண்டு மூடி அதன் மேல் மூலிகைச்செடிகள், நாவல், நெல்லி, மற்றும் வாழை மரங்களை நட்டு பசுமைப்பகுதியாக மாற்றியுள்ளனர். இதற்காக ரூ.13.94 கோடி செலவில் பசுமை பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

 ஆலையின் தலைவர் ரவிச்சந்திரன் கூறியது: ஆலையின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கோவிந்தபுரம், புதுப்பாளையம், அமீனாபாத் கிராமங்களில் 5 ஏரிகளை புனரமைத்துள்ளோம். மேலும், தொழிற்சாலையை சுற்றியுள்ள கிராமங்களில் கல்வி மேம்பாடு, குடிநீர் வசதி, மருத்துவ முகாம்கள் என அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருகிறோம். இந்த கிராமங்களை சேர்ந்த 22 மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், செந்துறை ரவுன்டானா முதல் ஒட்டக்கோவில் வரை 10 கி.மீ வரை உள்ள சாலைகளில் உயர் மின் கோபுர விளக்குகள் மற்றும் தெருவிளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்றார்.

Tags :
× RELATED 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பணிக்கு திரண்ட...