×

அரசு மருத்துவமனையில் தாய் சேய் நல பெட்டகம் பெற கடும் வெயிலில் காத்திருந்த தாய்மார்கள்

காஞ்சிபுரம், மார்ச் 8:  மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் பிரசவித்த தாய்மார்களுக்கு நேற்று காலை 10 மணிக்கு தாய் சேய் நல பெட்டகம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. காலை 9 மணிமுதல் தாய்மார்கள் மருத்துவமனைக்கு வந்து காத்திருந்தனர். 11 மணி ஆகியும் அதிகாரிகள் வரவில்லை. இதற்கிடையில், காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், கடந்த சில மாதங்களுக்கு முன் 6.8 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு தொட்டியை திறந்தார். அந்த குழாயில் தண்ணீர் வரவில்லை என எம்எல்வுக்கு புகார் சென்றது. இதையொட்டி, மருத்துவமனையில் ஆய்வு செய்ய எம்எல்ஏ எழிலரசன் அங்கு சென்றார். அப்போது அரசு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடப்பதை பார்த்த அவர், சுகாதாரத்துறை இணை இயக்குநர் செந்தில்குமாரிடம் விசாரித்தார். அப்போது, அரசு நிகழ்ச்சிக்கு அரசியல்வாதிகளுக்கு சொல்லவேண்டிய அவசியமில்லை என அவ பதிலளித்தார். இதனால் ஆத்திரமடைந்த எம்எம்ஏ, சட்டமன்றத் தொகுதி மக்களின் பிரதிநிதியாக நான் இருக்கிறேன். எனக்கு முறையாக தகவல் அளிக்காமல் அரசு நிகழ்ச்சி எப்படி நடத்தலாம் என கேள்வி எழுப்பினார். இதனால், இரு தரப்பினர் இடையே கடும் விவாதம் நடந்தது.

இதையடுத்து, மருத்துவமனையில் ஆய்வுக்கு வரும்படி எம்எல்ஏ, இணை இயக்குநரை அழைத்தபோது, அவர் வர மறுத்துவிட்டார். பின்னர் ஆர்எம்ஓ கல்பனா, குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்யசென்றார். அப்போது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்காதது குறித்து அவரிடம் கேட்டபோது   தண்ணீர் பஞ்சத்தால் வழங்கவில்லை என மழுப்பலான பதிலளித்தார்.அதற்கு, சில மாதங்களுக்கு முன் அதிமுக எம்பி மரகதம் குமரவேல் தொடங்கிய குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யும்போது ஏற்படாத தண்ணீர்பஞ்சம் திமுக எம்எல்ஏ திறந்து வைத்த தொட்டிக்கு ஏற்பட்டுள்ளதா என  பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் காலை 11 மணிக்கு மேலாகியும் தாய்சேய் நல பெட்டகம் வழங்க அதிகாரிகள் வரவில்லை. இதனால், எம்எல்ஏ எழிலரசன், தாய்மார்களுக்கு தாய்சேய் நல பெட்டகத்தை வழங்கினார். திமுக நகர அவைத்தலைவர் சந்துரு, துணை செயலாளர் கருணாநிதி, ஒன்றிய அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் செங்குட்டுவன், பார்த்திபன், லட்சுமணன், எம்எஸ்.சுகுமார், வெங்கடேசன், அபுசாலி, ரகு, மாமல்லன், தமிழ்ச்செல்வன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags : Mothers ,government hospital ,
× RELATED போராட்டங்களைப் பார்த்தே வளர்ந்தேன்…கண்ணகி (NFIW)