×

விநாயகா மிஷன்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் தொடர் மருத்துவ கருத்தரங்கு

சேலம், மார்ச் 7: விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில், சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு தொழில் நுட்ப பிரிவில் சமீபத்திய வளர்ச்சி என்ற தலைப்பில் தொடர் மருத்துவ கல்விக்கான கருத்தரங்கு நடைபெற்றது. துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். விம்ஸ் மருத்துவமனை சிறுநீரக பிரிவு மூத்த நிபுணர் டாக்டர் ஜோன்ஸ் ரொனால்ட் தலைமையுரையாற்றினார். விம்ஸ் மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் வாழ்த்துரை வழங்கினார். மருத்துவமனையின் அவசர சிகிச்சை மருத்துவ பிரிவு இயக்குநர் டாக்டர் சந்திரசேகரன், பொது மருத்துவ பிரிவு டாக்டர் ஈஸ்வரன் ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சியில் சென்னை ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு பிரிவு இணை பேராசிரியர் டாக்டர் ஜெகதீஷ்வரன், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையின் ரத்த சுத்திகரிப்பு பயிற்சியாளர் கோகுல், பெங்களூரு ப்ராண்டியர் லைப் லைன் மருத்துவமனையின் சிறுநீரக பொறுப்பாளர் பாத்திமா ருக்ஷானா மற்றும் பேக்ஸ்டர் நிறுவனத்தின் சென்னை கிளை பயிற்சியாளர் இமானுவேல் சிட்னி சுனில் ஆகியோர், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

Tags : Seminar ,
× RELATED சாயர்புரம் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்