×

சாம்சங் கேலக்ஸி எஸ்10 புதிய மொபைல் அறிமுகம்

சேலம், மார்ச் 7: சேலத்தில் 4 கிளைகளுடன் செயல்படும் சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனம், சாம்சங் நிறுவனம் இணைந்து, சாம்சங் கேலக்ஸி எஸ்10 என்ற புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் ெசய்துள்ளனர். இதில், சுப்ரீம் மொபைல்சின் 500 வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். புதிய கேலக்ஸி எஸ்10 மொபைலை, ஏவிஆர் ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் சஞ்சய் அறிமுகம் செய்து வைத்தார். சுப்ரீம் ெமாபைல்சின் இயக்குநர் வடிவேல், சாம்சங் நிறுவன ஜோனல் மேலாளர் சுவாமிநாதன், ஏரியா மேலாளர் அருள் ஜோதி, தொழில் அபிவிருத்தி மேலாளர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர். சாம்சங் நிறுவனம் இந்த மொபைலை அடுத்த தலைமுறைக்கான ஸ்மார்ட் போன் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த மொபைலின் சிறப்பம்சமாக (இன்பினிட்டி-ஓ-டிஸ்ப்ளே) 5 கேமராக்கள் (58 மெகா பிக்சல்) 12 ஜி பிரேம் மற்றும் 1 டெரா பைட் மெமரி அல்ட்ராஷோனிக் பிரின்ட் அமைத்துள்ளது. இந்த மொபைல், எஸ் 10ஈ, எஸ் 10, எஸ் 10+ என்னும் 3 வகைகளில் வருகிறது. இதன் விலை ₹55,900 முதல் ₹1,17,900 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல், சுப்ரீம் மொபைல்ஸ் அனைத்து கிளைகளிலும் நேற்று(6ம் தேதி) முதல் விற்பனைக்கு வந்துள்ளது. முன்பதிவு செய்பவர்களுக்கு ₹30 ஆயிரம் மதிப்புள்ள கேலக்ஸி வாட்ச் ₹9999க்கும், ₹6000 மதிப்புள்ள கேலக்ஸி பட்ஸ் ₹2999க்கும் வழங்கப்படும் என சுப்ரீம் மொபைல்சின் பிராந்திய விற்பனை மேலாளர் ராஜேசேகர் தெரிவித்துள்ளார்.

Tags : Samsung Galaxy S10 ,
× RELATED தேர்தல் விதிகள் குறித்து அனைத்து கட்சி கூட்டம்