தண்ணீர் இல்லாத சுருளி அருவி

கம்பம், மார்ச் 7: கம்பம் அருகே சுருளிஅருவியில் தண்ணீர் வரத்து இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கம்பம் அருகே சுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளாக உள்ள ஹைவேவிஸ், மேகமலை வனப்பகுதிகளில் சரிவர மழையில்லை. இதனால் அருவிக்கு வரக்கூடிய நீர்வரத்து சுத்தமாக குறைந்தது. இதனையடுத்து கடந்த 1 வாரத்திற்கு முன்பு பெய்த மழையினால் தண்ணீர்வரத்து ஏற்பட்டது. இதனால் சுற்றுலாபயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த தண்ணீர் 4 நாட்கள் மட்டுமே வந்த நிலையில் நேற்று மீண்டும் தண்ணீர் வராத நிலையில் அருவிக்கு வந்த சுற்றுலாபயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கு காரணம் மழையில்லாத நிலையாலும், இதேபோல் வனப்பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுவதாலும் சுருளி அருவி வறண்டு கிடக்கிறது. இதுகுறித்து பயணிகள் கூறுகையில், `` சுருளி அருவி இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் உள்ளது. இங்கு குளிப்பதால் உடலுக்கு பல மகிழ்ச்சிகள் உண்டாகும். ஆனால், மழையில்லாமல் போனதால் அருவிக்கு வரக்கூடிய தண்ணீர் இல்லாத நிலையில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

Related Stories:

More
>