×

பெருமாநல்லூரில் ஓட்டலில் பணியாற்றிய குழந்தை தொழிலாளி மீட்பு

திருப்பூர், மார்ச் 7: பெருமாநல்லூரில் ஓட்டலில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளியை தொழிலாளர் துறை அதிகாரிகள் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். திருப்பூர் சைல்டுலைன் அலுவலகத்திற்கு வந்த தகவலின் பேரில், திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வழிகாட்டுதல்படி, திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் ஓட்டலில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் இளங்கோவன், சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல், சைல்டுலைன் உறுப்பினர் ரவிபாரத் ஆகியோர் ஆய்வு நடத்தினர். இதில் அங்கு பணிபுரிந்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் மீட்கப்பட்டான். பின்னர் சிறுவன் குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டு குழந்தைகள் இல்லத்தில் சேர்க்கப்பட்டான். தொடர்ந்து சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நேற்று மாலை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டான். சிறுவனை பணியில் அமர்த்திய ஓட்டல் நிர்வாகத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், 18 வயது நிறைவடையாத சிறுவர்களை பணிக்கு அமர்த்தக்கூடாது எனவும் தொழிலாளர் துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டது.

Tags : child worker ,hotel ,
× RELATED பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!!