×

குடியிருப்பு பகுதிகளுக்குள் யானை நடமாட்டம்

கூடலூர், மார்ச் 7:  கூடலூரை அடுத்துள்ள தேவாலா ரோடு அம்பல கொல்லி பகுதியில்  50க்கும் மேற்பட்ட குடுபங்கள் வசித்து வருகின்றன. இதனை ஒட்டி விவசாய நிலங்களும் உள்ளன. இப்பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் காலை நேரத்தில் காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நடமாடியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில் பொது மக்கள் வசிக்கும் பகுதியில் நேற்று காட்டு யானை புகுந்ததால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வனப்பகுதிகளில் வறட்சி அதிகம் நிலவுவதால் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் உலா வருகிறது.  காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் எச்சரிக்கையுடன் நடமாட வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : areas ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...