×

கோடை சீசன் நெருங்குவதால் சுற்றுலாத்துறை மேம்பாட்டு பணி மும்முரம்

ஊட்டி, மார்ச் 7:  கோடை சீசன் நெருங்கிய நிலையில் சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மேம்பாட்டு பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன.  நீலகிரிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இருந்த போதிலும், கோடை சீசனான மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்கள், ஓட்டல்கள், பஸ் நிலையங்கள் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமே அலைமோதும். குறிப்பாக, அனைத்து சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் அவதிப்படுவர்.

தற்போது அனைத்து சுற்றுலா தலங்களிலும் பொருட்கள், விளையாட்டு பொருட்கள், தங்கும் விடுதிகள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. படகு இல்லத்தில் பழுதடைந்த படகுகள் சீரமைக்கும் பணிகள், வர்ணம் பூசும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகையை முன்னிட்டு சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை தற்போது மேம்பாட்டு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. ஆனால், பார்க்கிங் வசதிகள் மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்த, மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், வார இறுதி நாட்களில் ஊட்டி போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் சூழ்நிலை உள்ளது.

Tags : summer season ,
× RELATED கோடைகாலம் தொடங்கி உள்ளதால் பொய்கை...