×

விவிபேட் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

கிருஷ்ணகிரி,  மார்ச் 7: சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு கொண்டு வரப்பட்ட 700  வி.வி.பேட் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் மற்றும் அரசியல்  கட்சி பிரமுகர்கள் ஆய்வு செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி,  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள்  தீவிரமாக நடந்து  வருகிறது. ஏற்கனவே, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணகிரி,  பர்கூர், வேப்பனஹள்ளி, தளி, ஊத்தங்கரை(தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், கர்நாடக  மாநிலம் பெங்களூருவில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கிருஷ்ணகிரிக்கு  கொண்டு வரப்பட்டுள்ளது.  இந்நிலையில், நேற்று சேலத்தில் இருந்து 350 வாக்கு  பதிவு இயந்திரங்கள், 300 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் யாருக்கு  வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள உதவும் 700 வி.வி.பேட் இயந்திரங்கள் ஆகியவை  பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. வி.வி.பேட்  இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து, கலெக்டர் பிரபாகர் தலைமையில்  அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது. அப்போது பெங்களூரு பெல் நிறுவன பொறியாளர்கள், விவிபேட்  இயந்திரத்தின் செயல்பாடுகள் மற்றும் அதனை பயன்படுத்தும் முறைகள் குறித்து  செயல்விளக்கம் அளித்தனர்.
இந்த ஆய்வின் போது, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ, அதிமுக நகர  செயலாளர் கேசவன், காங்கிரஸ் கட்சி பன்னீர்செல்வம், பாஜ கோவிந்தராஜ், தேமுதிக  முருகேசன், சண்முகம், தேசியவாத காங்கிரஸ் கட்சி சந்திரமோகன் உள்ளிட்ட  அனைத்து கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Tags :
× RELATED கஞ்சா விற்ற 2 பேர் கைது