×

நாமகிரிப்பேட்டையில் ₹12 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டை, மார்ச் 7: நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, மங்களபுரம், புதுப்பட்டி, சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை கொண்டு வந்தனர். ஆத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மஞ்சளை வாங்க வியாபாரிகள் வந்திருந்தனர்ஏலத்தில், 310 மஞ்சள் மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. அதில் விராலி மஞ்சள் 190 மூட்டையும், உருண்டை மஞ்சள் 70 மூட்டை, பனங்காலி மஞ்சள் 50 மூட்டை என மொத்தம் 310 மூட்டைகள் ஏலத்திற்கு வந்தன. விராலி ரக மஞ்சள் அதிகப்பட்சம் குவிண்டால் ஒன்றுக்கு 9,149க்கும், குறைந்தபட்சம் 5,629க்கும், உருண்டை ரக மஞ்சள் அதிகப்பட்சம் 6,985க்கும், குறைந்தபட்சம் 5,365க்கும், பானக்காலி ரக மஞ்சள் அதிகப்பட்சம் 16,6229க்கும் குறைந்தபட்சம்  12,899க்கும் விலை போனது. மொத்தம் 310 மூட்டைகள் ₹12 லட்சத்துக்கு விற்பனை ஆனது.


Tags : Namagiri Reddy ,
× RELATED நாமகிரிப்பேட்டையில் ₹12 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்