×

பாலகொலா சந்திப்பு அருகே குப்பைத் தொட்டி எரிந்து நாசம்

ஊட்டி, மார்ச் 7: ஊட்டி அருகேயுள்ள பாலகொலா சந்திப்பு (6வது மைல்) பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குப்பை தொட்டிக்கு சிலர் தீ வைத்ததால், குப்பை கொட்ட இடம் இன்றி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலகொலா சந்திப்பு (6வது மைல்) பகுதியில்  50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். ேமலும், வணிக நிறுவனங்களும் அதிகம் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மிஞ்சும் குப்பைகளை கொட்டுவதற்காக ஒரு குப்பை தொட்டி வைக்கப்பட்டிருந்தது. சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்த குப்பை தொட்டி அதிகரட்டி ேபரூராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்தது. சுழலும் வடிவில் ஒரு சின்டெக்ஸ் டேங்க் அதில் பொருத்தப்பட்டிருந்தது. அதில், பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த குப்பை தொட்டியை மர்ம நபர்கள் சிலர் எரித்துள்ளனர். இதில் பிளாஸ்டிக் டேங்க் முழுமையாக எரிந்து சாம்பலாகிவிட்டது. குப்பை தொட்டி இல்லாத நிலையில், குப்பைகளை கொட்டுவதற்கு இடமின்றி அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சிலர், சாலையோரங்களில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகரட்டி பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அப்பகுதியில் குப்பை தொட்டி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Balakola Junction ,
× RELATED பாலகொலா சந்திப்பு அருகே குப்பைத் தொட்டி எரிந்து நாசம்