×

ஜெர்மனியில் நடந்த போட்டியில் வென்று நாமக்கல் பெண்கள் அணி சாதனை

நாமக்கல், மார்ச் 7: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், நாமக்கல்லில் மாணவிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கி இருக்கும் மாணவிகள் கால்பந்து, கபடி, குண்டு எறிதல், ஓட்டம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியில் நடந்த கால்பந்து போட்டியில், நாமக்கல் அரசு பெண்கள் கால்பந்து அணி கலந்து ெகாண்டு ஜெர்மனி பெண்கள் அணியுடன் மோதியது. இதில் ஜெர்மனி அணியை வீழ்த்தி நாமக்கல் அணியினர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். மேலும் நாமக்கல் அரசு விடுதியில் தங்கி பயிற்சி பெற்ற மாணவிகள் ஜெர்மனி சென்று வெற்றி பெற்றது, இது போன்று பயிற்சி பெறும் பெண்களுக்கு ஒரு முன் உதாரணமாக அமைந்துள்ளது.

Tags : Namakkal Women ,match ,Germany ,
× RELATED தூத்துக்குடியில் நாளை முதல்...