×

உலக திறனாய்வு தடகள போட்டி லயன்ஸ் பள்ளி வெற்றி

ஈரோடு, மார்ச் 7: மண்டல அளவிலான உலக திறனாய்வு போட்டியில் ஈரோடு லயன்ஸ் பள்ளி மாணவ, மாணவியர் வெற்றி பெற்றனர். கோவை மண்டல அளவிலான உலக திறனாய்வு போட்டி திருப்பூரில் கடந்த வாரம் நடந்தது. இப்போட்டியில், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில், அவல்பூந்துறை லயன்ஸ் பள்ளி மாணவ, மாணவியர் பெற்றி பெற்று அரசின் ஊக்கத்தொகையை பரிசாக பெற்றனர். வெற்றி பெற்ற 11 மாணவ, மாணவியரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, பள்ளி தலைவர் நடராஜ் ஆகியோர் பாராட்டினர்.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை