×

பத்ரகாளியம்மன் கோயில் குண்டம்

ஈரோடு, மார்ச் 7:  ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று நடந்த குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாநகர் கள்ளுக்கடை மேட்டில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக் கோயிலில் ஆண்டு தோறும் குண்டம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, இந்த ஆண்டு குண்டம் விழா கடந்த மாதம் 19ம் தேதி இரவு பூச்சாட்டுடன் துவங்கியது. 25ம் தேதி இரவு கொடியேற்றமும், கடந்த 3ம் தேதி அக்னி கபால பூஜையும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று குண்டம் விழா நடந்தது.

முன்னதாக, அதிகாலை 5 மணிக்கு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, கோயில் பூசாரிகள் முதலில் குண்டம் இறங்கினர். அவர்களை தொடர்ந்து  காப்புக்கட்டி விரதம் இருந்த 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி தீ மிதித்தனர். இதில், ஏராளமான பெண்கள் தங்களது குழந்தைகளை கையில் வைத்தபடி குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். குண்டம் இறங்க பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அசாம்பாவிதங்களை தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் பொங்கல் விழாவும், இரவு 9 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும் நடந்தது. இன்று (7ம் தேதி) மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

Tags : Bhadrakaliyamman ,
× RELATED சஸ்பெண்ட் செய்யப்பட்ட செயல் அலுவலர் மீது நிதி முறைகேடு வழக்கு