×

ரவணசமுத்திரத்தில் கோயில் திருவிழா

கடையம், மார்ச் 7: கடையம் அருகே ரவணசமுத்திரம் முப்பிடாதி அம்மன் கோயிலில், கடந்த வாரம் கொடை விழா துவங்கியது. 5ம் தேதி எட்டாம் பூசை திருவிழா நடந்தது. இதையொட்டி மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணியளவில் திரைப்பட இசையமைப்பாளர் பரத்வாஜ் தலைமையில் இன்னிசை கச்சேரியும், இரவு 11 மணியளவில் சப்பர ஊர்வலமும் நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊர் தலைவர் பரமசிவன் பிள்ளை, ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ராமலிங்கம், ஆறுமுகம், சுப்பிரமணியன், சுப்பையா மற்றும் ரவணசமுத்திரம் வஉசி இளைஞரணியினர் செய்திருந்தனர்.

Tags : Temple Festival ,Ravana Samartha ,
× RELATED மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வெறிச்சோடிய மீன் மார்க்கெட்