×

மண்ணச்சநல்லூர்- சமயபுரம் ரோட்டில் குறுகிய பாலத்தை அகலப்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

மண்ணச்சநல்லூர், மார்ச் 7:  மண்ணச்சநல்லூர்- சமயபுரம் ரோட்டில் உள்ள குறுகிய பாலத்தை அகலப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்ணச்சநல்லூர்- சமயபுரம் ரோட்டில் உள்ளது. 94 மேல சீதேவிமங்கலம். இது மண்ணச்சநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 14வது வார்டாகும். இந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் புள்ளம்பா டிவாய்க்கால் பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த பாலம் 1960ல் காமராசர் காலத்தில் கட்டப்பட்டதாகும். மேலும் 94 சீதேவிமங்கலத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறனர். இந்த ஊருக்கு சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து நம்பர் 1 டோல்கேட், நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக காலை 8.45 மணிக்கும்,  மாலை 6 மணிக்கும் பேருந்து வந்து செல்வது வழக்கம். இதை தவிர பள்ளி வேன் மற்றும் விவசாய பணிகளுக்காக டிராக்டர், மினி லோடு ஆட்டோ, கனரக வாகனங்களும் செல்கின்றன. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், அரிசி ஆலைக்கு பணிக்கு செல்வோர் என தினமும் ஏராளமானோர் புள்ளம்பாடி பாலத்தை கடந்து செல்ல வேண்டும்.

இதில் உயிர்ப்பலி வாங்கும் நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த செல்வம் (79) என்பவர் கூறும்போது, மண்ணச்சநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 94 மேலசிதேவி மங்கலத்தில் சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ளவர்கள் பெரும்பாலானோர் விவசாய கூலி தொழிலை நம்பி உள்ளனர். நான் படிக்கும் காலத்தில் இருந்து இந்த புள்ளம்பாடி பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். அப்போது மக்கள் தொகை குறைவாகவே இருந்து வந்தது. காலப்போக்கில் மக்கள் தொகை பெருகி விட்ட காரணத்தால் தினம்தோறும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும் இந்த பாலம் கட்டி சுமார் அறுபது ஆண்டு காலம் கடந்த நிலையில் பாலம் குறுகலாகவும், மிகவும் பலவீனமாகவும் உள்ளது. எனவே அரசு கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலத்தை கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,road ,Mannachanallur-Samayapuram ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி