×

முன்விரோதத்தில் பயங்கரம் மீன்வியாபாரி ஓட, ஓட வெட்டிக் கொலை அவனியாபுரத்தில் பரபரப்பு

அவனியாபுரம், மார்ச் 7: முன்விரோதத்தில் மீன் வியாபாரி ஓட, ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்த சம்பவம், அவனியாபுரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அவனியாபுரம் தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் மாரி (43), மீன் வியாபாரி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சித்ேரஷ் என்பவருக்கும், முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் அம்பேத்கர் நகரில் மாரி தனது நண்பர் அழகருடன் வந்து கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல், இருவரையும் ஓட, ஓட விரட்டி வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மாரி பலியானார்.

படுகாயம் அடைந்த அழகர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அவனியாபுரம் போலீசார், மாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ‘பெரியார் நகரைச் சேர்ந்த குட்டீஸ் மகன் ஆவா என்ற முத்துச்செல்வம் தலைமையில் 6 பேர் கொண்ட கும்பல், இந்த கொலையை செய்தது தெரிய வந்துள்ளது. இதற்கு சித்ரேஷ் தரப்பினர் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். கொலை செய்யப்பட்ட மாரி, ஏற்கனவே, கொலை செய்யப்பட்ட பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் இளஞ்செழியனின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : fishermen ,
× RELATED பிரதமர் வருகை – குமரி மீனவர்கள் மீன்பிடிக்க தடை