×

மேலக்கொருக்கையில் புயலால் சேதமானதால் பள்ளியில் கடை இயங்குகிறது மாதம் ஒரு முறை ரேஷன் பொருள் வழங்குவதால் பொதுமக்கள் அவதி புதிய கட்டிடம் கட்ட வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, மார்ச்7: மேலக்கொருக்கையில் புயலால் சேதமானதால் பள்ளியில் ரேஷன் கடை இயங்குகிறது. மாதம் ஒருமுறை ரேஷன் ெபாருள் வழங்குவதால்  பொதுமக்கள் அவதியடைகின்றனர். ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மேலகொருக்கையில் 1988ம் ஆண்டு கட்டப்பட்டசமுதாயகூடத்தில் பகுதி நேர ரேஷன் கடைமற்றும் அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது.பின்னர் நாளடைவில் இந்த கட்டிடம் சேதமடைந்த போதிலும் இரண்டும் இயங்கி வந்தது.இந்த பகுதியிலுள்ள சுமார் 350 குடும்ப அட்டைதாரர்கள் இந்த ரேஷன் கடையில் தான் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வந்தனர்.பின்னர் அங்கன்வாடி மையம் அருகிலுள்ள மேல கொருக்கை ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளிக்கு எதிரே புதியதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு சென்று விட்டது.பகுதி நேர ரேஷன் கடை மட்டும் சமுதாய கூடத்திலேயே இயங்கி வந்தது. கஜா புயலில் சமுதாய கூடம் முற்றிலும் சேதமடைந்ததால் ரேஷன் கடையை அருகிலுள்ள மேலக்கொருக்கை ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளி வளாகத்தில் பின்புறமுள்ள ஒரு வகுப்பறை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் பொருட்கள் தினந்தோறும் வழங்குவதில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அந்தபகுதியை சேர்ந்த மேனகா  மற்றும் புனிதா இருவரும் கூறுகையில்: சமுதாயகூடத்தில் ரேஷன்கடை இயங்கி வந்த போது மாதத்தில் நான்கு சனிக்கிழமைகளில் பொருட்கள் வழங்கி வந்தனர். தற்போது பள்ளி கட்டிடத்தில் ரேஷன் கடைஇயங்கி வருவதால் மாதத்தில் ஒரு முறைதான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஒரே நேரத்தில் அனைவரும் ரேஷன் பொருட்கள் வாங்க செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் சிரமபடுகின்றனர் என்றனர். சேதமடைந்துள்ள சமுதாய கூடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு இந்த இடத்தில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டும் வரை பள்ளியில் இயங்கும் ரேஷன் கடையை பள்ளி விடுமுறை நாட்களில் திறந்து அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : shop ,storm ,school ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி