×

70% பிரசவங்கள் ஜிஹெச்சில் நடக்கிறது அமைச்சர் தகவல்

புதுக்கோட்டை, மார்ச்7: புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் புதிய மேம்படுத்தப்பட்ட தாய்மை நலம்  மற்றும் குழந்தை நல சிகிச்சை மையத்தின் திறப்பு விழா நடை பெற்றது. கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். எம்பி செந்தில்நாதன்,  மருத்துவ கல்லுாரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   
சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மையத்தினை திறந்து வைத்து பேசிய தாவது:  இந்திய அளவில் தமிழகத்தில் ஆண்டுதோறும் 10லட்சம்  குழந்தைகள் பிறக்கின்றது. இதில் 7லட்சம் குழந்தைகள் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கிறது. இதன் மூலம் 70சதவீத பிரசவங்கள் அரசு  மருத்துவமனைகளில் நடைபெறுவது. இந்தி யாவில் வேறு எந்த மாநிலத்திலும்  கிடையாது என்றார். நிகழ்ச்சியில்  மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் சந்திரசேகரன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : births ,
× RELATED திருச்சியில் 1,695 மையங்களில் போலியோ...