×

அரிமளம் அருகே காயத்துடன் மீட்கப்பட்ட மான் வனத்துறையிடம் ஒப்படைப்பு

திருமயம், மார்ச் 7: அரிமளம் அருகே வனப்பகுதியில் காயத்துடன் மீட்கப்பட்ட மானை அப்பகுதி இளைஞர்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் இருந்து மேல்நிலைப்பட்டி செல்லும் சாலையில் 5 கண்ணு பாலம் அருகே நேற்று இரவு அப்பகுதி சேர்ந்த இளைஞர்கள் சென்றபோது மான் பெண் மான் ஓட முடியாமல் மயங்கி கடந்தது. இதனை கண்ட இளைஞர்கள் அருகில் சென்று பார்த்தபோது மானின் காலில் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இந்நிலையில் காயமடைந்த மானை தங்களது பைக்கில் ஏற்றி கொண்டு சென்று அரிமளம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து காயமடைந்த மானுக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்த பின்னர் வன பகுதிக்குள் விட்டனர்.

அரிமளம், திருமயம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு போதுமான நீர், தீவனமின்றி ஆண்டுதோறும் மான் உள்ளிட்ட விலங்குகள் இறப்பது தொடர்கதையாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோடை காலங்களில் வன விலங்குகள் குடியிறுப்பு பகுதிக்குள் இறை தேடி வருவதை தடுக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Deer Forest Reserve ,Ernakulam ,
× RELATED மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆவணப்படம்:...