×

பொன்னமராவதி பகுதியில் போர்வெல் நீரில் கோடை சாகுபடி துவக்கம்

பொன்னமராவதி, மார்ச் 7: பொன்னமராவதி பகுதியில் போர்வெல் நீரை கொண்டு கோடை சாகுபடியை விவசாயிகள் துவங்கி உள்ளனர். பொன்னமராவதி பகுதியில் கடும் வறட்சி நிலவி வரும் வேலையில் போர்வெல் மூலம்  ஒருசில இடங்களில் கோடை நடவுப்பணிகளும் நடைபெற்று வருகிறது. பொன்னமராவதி பகுதியில் கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் கூட செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதி விவசாயிகள் போதுமான அளவு தண்ணீரின்றி விவசாயம் செய்யாமல் விளை நிலங்களும் தரிசாக கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் அன்றாட பிழைப்பிற்கு சிரமப்பட்டு வருகின்றனர். குடும்பம் குடும்பமாக ஊரை விட்டு நகரங்களுக்கு பிழைப்பைத்தேடி செல்கின்றனர்.

விவசாயி பாண்டி என்பவர் கூறியதாவது: நாங்கள் விவசாயத்தை நம்பி வாழுகிறோம் போதிய மழையின்றி விவசாயம் செய்ய முடியவில்லை. இதனால் போர் போட்டும் போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. இதுவரை 20க்கும் மேற்பட்ட போர் போட்டு பார்த்துள்ளேன். கடனை வாங்கி இதுவரை ரூ.5லட்சத்திற்கு மேல் செலவளித்து விட்டோம். இதுவரை விவசாயம் செய்ய போதிய தண்ணீர் கிடைக்க வில்லை என்றார். இவ்வாறு இப்பகுதி விவசாயிகள் லட்சக்கணக்கில் செலவு செய்து போர்வெல் அமைத்தும் கடுமையாக வெப்பத்தால் தண்ணீர் கிடைக்கவில்லை. ஒரு சிலர் மட்டும் போர்வெல்லில் தண்ணீர் வந்து கோடை நடவுப்பணிகள் செய்கின்றனர்.

Tags : warren water ,Ponnaravaradi ,
× RELATED பொன்னமராவதி பேருந்து நிலையத்தில்...