×

மாநில ஹாக்கி போட்டி அரியலூர் அணி வெற்றி

அரியலூர், மார்ச் 7: திருச்சியில் நடந்த மாநில ஹாக்கி போட்டியில் அரியலூர் மாவட்ட அணி 2ம் இடம் பிடித்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆனையம் சார்பில் திருச்சியில் மாநில அளவிலான ஹாக்கி லீக் தொடர் போட்டி நடந்தது. தமிழகத்தில் உள்ள 6 மண்டலங்களில் இந்து மண்டலத்துக்கு 2 அணிகள் வீதம் 12 அணிகள் பங்கேற்றது. இதில் அரியலூர் மாவட்ட ஹாக்கி அணி பங்கேற்று மாநில அளவில் 2ம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற அரியலூர் அணிக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜெயக்குமார்ராஜா, ஹாக்கி இந்தியா மாவட்ட செயலாளர் பாரதிதாசன், துணை செயலாளர் யோகநாதன், ஹாக்கி இந்தியா முன்னாள் மாநில பொருளாளர் காதர் மொய்தீன், மதுரை விளையாட்டு விடுதி மேலாளர் லெனின், பசுபதி ஹாக்கி கழக செயலாளர் குணசேகரன் மற்றும் பலர் பாராட்டினர்.

Tags : State Hockey Contest Ariyalur ,team ,
× RELATED கனியாமூர் பள்ளி தொடர்பான வழக்கின்...