×

முகநூலில் விமர்சனம் பாஜ பிரமுகர் கைது

சேதுபாவாசத்திரம், மார்ச் 7: மல்லிப்பட்டினம் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் அம்மையப்பன் (35). இவர் சேதுபாவாசத்திரம் ஒன்றிய பாஜ செயலாளராக உள்ளார். இவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை பற்றி தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து சைபர் கிரைமில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சேதுபாவாசத்திரம் போலீசார் விசாரணைக்கு சென்றபோது போலீசாருடன் வாக்குவாதத்தில் அம்மையப்பன் ஈடுபட்டார். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் சப்இன்ஸ்பெக்டர் தங்கவேல் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அம்மையப்பனை கைது செய்தனர்.

Tags :
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா