×

தரங்கம்பாடி அருகே நிலக்கடலை விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

தரங்கம்பாடி, மார்ச்7: நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே நிலக்கடலை விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த உரம் மற்றும் பூச்சி நிர்வாகத்திற்கான உயரிய தொழில் நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் செயல்படும் நீர்வள மற்றும் நிலவள திட்டத்தின் கீழ், தரங்கம்பாடி அருகே உள்ள சிங்கானொடை கிராமத்தில் நடந்த இந்த பயிற்சியில் வேளாண் பல்கலை கழகத்தில் இயங்கி வரும் நீர்நுட்ப மையம் வாயிலாக உலக வங்கி நிதியுடன் ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், நீர்வள, நிலவள திட்டத்தில் காவிரி பாசன பகுதி விவசாயிகளுக்கு ஏற்ற வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு உகந்த தொழிற்நுட்பங்களை வயல்வெளி செயல் விளக்கமாக பயிற்சி அளிக்கபட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மேம்படுத்தபட்ட நிலக்கடலை சாகுபடி செயல் விளக்க திடல்கள் தரங்கம்பாடி பகுதியில் 12.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கபட்டு நிலக்கடலையில் ஒருங்கிணைந்த உரம் மற்றும் பூச்சி நிர்வாகத்திற்கான உயரிய தொழில்நுட்ப பயிற்சி நிலக்கடலை விவசாயிகளுக்கு அளிக்கபட்டது. தமிழ்நாடு நெல் ஆராய்சி நிலைய இயக்குநர் டாக்டர் அம்பேத்கார் தலைமை வகித்து விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகளை விளக்கினார். முன்னோடி விவசாயிகளான பத்துகட்டுபிரபாகரன், சிங்கானோடை சக்கரபானி, உட்பட 50க்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்துகொண்டனர்.

Tags : groundnut farmers ,Tharangambadi ,
× RELATED பறக்கும் படை சோதனையில் சிக்கிய ₹3.31...