×

கொள்ளிடம் பகுதியில் உளுந்து பயிரில் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த ஆலோசனை

கொள்ளிடம், மார்ச் 7: கொள்ளிடம் பகுதியில் உளுந்து மற்றும் பயிறு ஆகிய பயிர்களில் பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் இயக்குனர் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் ஆச்சாள்புரம், அளக்குடி, பச்சபெருமாள்நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உளுந்து மற்றும் பயறு பயிரிடப்பட்டுள்ள வயல்களில் கொள்ளிடம் வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், கொள்ளிடம் வட்டாரத்தில் உளுந்து பயறு, பருத்தி, எள், நிலக்கடலை ஆகிய பயிர் சாகுபடி துரிதமாக நடைபெற்று வருகிறது. உளுந்து பயிரில் ஏற்படும் புருடினியா, அசுவினி, மற்றும் சாம்பல் நோய் மற்றும் இதர பூச்சி நோய்களை  கட்டுப்படுத்துவதற்கு வேளாண்மைத் துறை அலுவலர்களுடன் தேவையான பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்பொழுது உளுந்து பயிரில் புருடினியா புழுவின் தாக்குதல் பரவலாக தென்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் பனி பொழிவு இருப்பதால் புழுவின் தாக்குதலும் அதிகமாக
இருக்க வாய்ப்புள்ளது.

இப்புழுக்கள் இலைகளை ஓட்டைப்போடுவதுடன் காய்களையும் சேதப்படுத்த வாய்ப்புள்ளது. இவற்றை கட்டுப்படுத்த அசாடிராக்டின் என்ற பூச்சி மருந்தை (அ) டைமத்பெட் 30 சதவிகித இசி இமாசிடின் பென்ச்சோவெட் 5 சதவிகித எஸ்ஜி 100 கிராம் ஆகிய பூச்சி மருந்துகளில் ஏதாவது ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். மேலும் விபரங்களுக்கு அந்தந்த பகுதி வேளாண் உதவி அலுவலர்களை அணுகி பயன்பெற வேண்டும் என்றார்.

Tags : coconut area ,insect attack ,
× RELATED நெற்பயிரில் ஏற்படும் பூச்சி...