×

நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் கஜா புயலில் தப்பிய மா மரங்கள் பூத்து குலுங்குகின்றன விவசாயிகள் மகிழ்ச்சி

சீர்காழி, மார்ச் 7:நாகை மாவட்டத்தில் கஜா புயலிலிருந்து தப்பிய மாமரங்கள் பூத்து குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகை மாவட்டம், வேதாரண்யம், நாங்கூர், கீழ்வேளூர், தலைஞாயிறு, திருக்கடையூர், ஆக்கூர், சங்கரன்பந்தல், செம்பனார்கோவில், அல்லிவிளாகம், திருவெண்காடு, மங்கைமடம், ராதாநல்லூர், இளையமதுகூடம், எம்பாவை, மயிலாடுதுறை, மணல்மேடு, சீர்காழி, பட்டவர்த்தி, வில்லியநல்லூர், வைத்தீஸ்வரன்கோவில், எடமணல், சியாளம், கொள்ளிடம், திருமைலாடி, கூத்தியம்பேட்டை, சோதியக்குடி, கடுக்காமரம், நல்லூர், சரஸ்வதிவிலாகம், ஆச்சாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி நடந்து வருகிறது. இந்த பகுதிகளில் அல்போன்சா, மல்கோவா, இமாம் பசந்,  நீலம், ஒட்டு, பில்பசந்து, சக்கரகட்டி, ருமானி, காலாபாடி, பங்கனப்பள்ளி, கெதமா, பாதிரி, ஆகிய வகை மாமரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில்  ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் மாமரத்தில் பூக்கள் பூக்க துவங்கி மூன்று மாதம் கழித்து மே மாதத்தில் மாங்காய் அறுவடைக்கு தயாராகும். இங்கு விளைய கூடிய மாங்காய் மற்றும் மாம்பழங்கள் அதிக சுவை உள்ளதாக இருப்பதால் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாட்டிற்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் உள்ளூர் சந்தைகளிலும்  விற்பனை செய்யப்படும்.

கடந்த சில மாதங்களுக்கு முன் வீசிய கஜா புயலின் கோரப்பிடியில் இருந்து தப்பிய மரங்களில் எஞ்சியுள்ள மா மரங்களில் தற்போது பூக்கள் அதிகளவில் பூத்து குலுங்குகின்றன. இதனால் கஜா புயலின்போது தங்களது வாழ்வாதாரங்களை இழந்து பரிதவித்த விவசாயிகள் இந்த ஆண்டு நல்ல வருவாய் கிடைக்கும் என மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.  இதுகுறித்து சீர்காழியில் மாந்தோப்புகள் வைத்திருக்கும் மணி கண்டன் கூறுகையில்,தற்பொழுது மாந்தோப்புகளில் உள்ள மாமரங்களில் 10 ஆண்டுகளுக்கு பிறகு பூக்கள் அதிகளவில் பூக்க தொடங்கியுள்ளனர்.இதனால் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் மாமரத்தில் அதிகமாக  பூக்கள் பூத்துள்ள நிலையில் வெயில் அதிகமாக அடித்தாலும் அதிக மழை பெய்தாலும், பலத்த காற்று அடித்தாலும். அதிக பணி பெய்தாலும் பூக்கள் கருகும் நிலை ஏற்படும்.  இதுபோன்ற நிலை இல்லாமல் இருந்தால் இந்த ஆண்டு மா.விவசாயிகளுக்கு நல்ல வருவாய்
கிடைக்க வாய்ப்புள்ளது.  

ஒரு ஏக்கரில் மா சாகுபடி செய்ய சுமார் 25 ஆயிரம் வரை செலவாகும்.  ஒரு ஏக்கரில் பூச்சு தாக்குதல் இல்லாமல் இருந்தால் லாபமாக 50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்.  ஒரு ஏக்கருக்கு 5 டன் வரை மாங்காய் கிடைக்கும் நாகை மாவட்டத்தில் மாங்காய் பின்னோக்கிய காய்க்க தொடங்கி அறுவடைக்கு தயாராகிறது. மா.விவசாயிகளுக்கு மழை, காற்று, பணியால் பூக்கள் கொட்டி இழப்பு ஏற்பட்டால் நஷ்டஈடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார். அதிக ருசியாக இருக்கும் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் தான் பாதிரியார் ஒருவர் மிக அதிக  ருசி கொண்ட ஒரு மா விதயை வெளிநாட்டில் இருந்து எடுத்து வந்து மயிலாடுதுறையில் விதையிட்டு அதனை வளர்த்து உள்ளார். இதன் மூலம் கிடைத்த மாங்காய், மாம்பழம் ருசியாக இருந்ததால் இந்த மாம்பழம் தமிழகம் முழுவதும் பரவி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாதிரியார் மா விதையை போட்டு  உற்பத்தி  செய்யததால் இந்த மாம்பழத்திற்கு பாதிரி மாம்பழம் என பெயர் வந்துள்ளது.

Tags : Gaza Strip ,Sirkali ,area ,Nagoy District ,
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு