×

கரூர் அருகே சின்னமநாயக்கன்பட்டியில் சீரமைக்கப்படாமல் கிடக்கும் சிதிலமடைந்த பள்ளி கட்டிடம்

கரூர், மார்ச் 7:  கரூர் அருகே சின்னமநாயக்கன்பட்டியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள துவக்கப்பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம் புலியூர் அருகே சின்னமநாயக்கப்பட்டி கிராமம் உள்ளளது. இந்த பகுதியில் பல்வேறு தெருக்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இதில், பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த துவக்கப்பள்ளி கட்டிடம் பழுதடைந்து இருந்ததால் இங்கு பயின்று வந்த மாணவ, மாணவிகள் அனைவரும் அருகில் செயல்பட்டு வரும் மற்றொரு பள்ளி வளாகத்துக்குள் மாற்றப்பட்டுள்ளனர்.

ஆனால், சிதிலமடைந்த நிலையில் உள்ள துவக்கப்பள்ளி ஓட்டு கட்டிடம் மட்டும் இதுநாள் வரை சீரமைக்கப்படாமல் அப்படியே உள்ளது. அதிக காற்றடித்தால், ஓடுகள் சிதறி குடியிருப்பு பகுதிக்குள் வந்து விழும் நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை சீரமைத்து, திரும்பவும் பள்ளி மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அனைத்து பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் இந்த சிதிலமடைந்த கட்டிடத்தை மாற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Tags : school building ,Chinnamayankackpatti ,Karur ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்