×

கூடை பந்து வீராங்கனை வீட்டில் எல்இடி டிவி திருடிய கொள்ளையன் கைது

சென்னை: சென்னை மயிலாப்பூர் அருளானந்தம் தெருவை சேர்ந்தவர் அழகு தமிழ்மொழி (28). ரயில்வே பெண்கள் அணியின் கூடை பந்து வீரங்கனை.  கடந்த 28ம் தேதி புதுச்சேரியில் நடைபெற்ற கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள சென்றுவிட்டார். பின்னர் கடந்த 3ம் தேதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 32 இன்ச் எல்இடி டிவி ஒன்று, 2 கைக்கடிகாரம், 1 கிராம் செயின், 1 செல்போன் மாயமாகி இருந்தது.

இதுகுறித்து அழகு தமிழ்மொழி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அப்போது பழைய குற்றவாளியான மெரினா பிளாட்பாரத்தில் வசித்து வரும் லட்சுமணன்(எ) கார்த்திக் (20), ஹரி (எ) அர்ஜூன் என தெரிய வந்தது. உடனே போலீசார் லட்சுமணனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஹரியை தேடி வருகின்றனர்.

Tags : basket player ,LED TV ,home ,
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு