×

தில்லைகாளிக்கு மகாபிஷேகம்

சிதம்பரம், மார்ச் 7: சிதம்பரம் எல்லையில் உள்ள தில்லைகாளியம்மன் கோயிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு அர்த்தசாம சிறப்பு பூஜை மற்றும் மகாபிஷேகம் நடந்தது. அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி தினங்களில் ராகுகாலத்தில் தீபம் ஏற்றி தில்லைகாளியை வழிபட்டால் பூர்வ ஜென்ம சாப தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகமாகும். நேற்று முன்தினம் இரவு அமாவாசையை முன்னிட்டு கோயிலில் விநாயகர், பிரம்மசாமுண்டி சன்னதியில் நெய் தீப ஆராதனை வழிபாடு நடந்தது. இதனை தொடர்ந்து மேள தாளம் முழங்க தில்லைகாளிக்கு குடம் குடமாக நல்லெண்ணெய் அபிஷேகமும் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தில்லைகாளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் மகாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர்.

Tags : ceremony ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா