×

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கடலூர், மார்ச் 7:  கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகில் அனைத்து குடியிருப்போர் சங்கத்தினர் கடலூர் நகரம் மற்றும் புறநகர் பகுதியில் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும், வீட்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதியில் வீட்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். கோண்டூர் பேருந்து நிலையத்தில் பகல் இரவு நேரங்களில் அனைத்து பேருந்துகளும் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும். கோண்டூர் ஊராட்சி பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கும் பணியினை முடித்திட வேண்டும்.  கடலூர் நகராட்சியில் ரட்சகர் நகர், வரதராஜன் நகர், வில்வ நகர், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்ட பூங்கா திறப்பு விழா காணாமல் உள்ளதை உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும். நகர் பகுதியில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி இருப்பதை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் கம்மியாம்பேட்டையில் உள்ள குப்பை கிடங்கு அம்ருத் திட்டத்தில் மாற்றி அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. சுகாதார சீர்கேட்டை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் குப்பை கிடங்கை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கஸ்டம் சாலையை தாழங்குடா வரை நீட்டிக்க வேண்டும். நகரில் அனைத்து பிரதான சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்கும் பொருட்டு சிக்னல் அமைத்து கூடுதல் காவலர்களை போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  அனைத்து குடியிருப்போர் நலச் சங்க பொதுச் செயலாளர் மருதவாணன், நிர்வாகிகள் வெங்கடேசன், சுகுமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : demonstration demonstration ,
× RELATED திக கண்டன ஆர்ப்பாட்டம்