×

சாம்பல் புதனை யொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி

தூத்துக்குடி,மார்ச் 7: சாம்பல் புதன் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி சின்னக்கோவில் என அழைக்கப்படும் திரு இருதயங்களின் பேராலயத்தில் கத்தோலிக்க மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தூய பனிமய மாதா பேராலயத்தில் பங்கு தந்தை லெரின் டி ரோஸ் தலைமையில் சிறப்பு சாம்பல் புதன் திருப்பலி நடந்தது.  புனித அந்தோணியார் திருத்தலம், யுதா ததேயு திருத்தலம் உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை பிராங்கிளின் பர்னாண்டோ தலைமையில் சாம்பல் புதன் முதல்நாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இறைமக்களுக்கு நெற்றியில் சாம்பலை சிலுவை அடையாளம் இட்டனர். ஏப்ரல் 19ம் தேதி இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனிதவெள்ளி அனுசரிக்கப்படுகிறது. தொடர்ந்து ஏப்ரல் 21ம் தேதி இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதுபோல தூத்துக்குடியில் உள்ள தென்னிந்திய திருச்சபைக்குட்பட்ட டூவிபுரம் தூய யாக்கோபு ஆலயத்தில் திருப்பணிவிடையாளர் லூர்துராஜ் ஜெயசிங் தலைமையிலும், மில்லர்புரம் புனித பவுலின் ஆலயத்தில் சேகரதலைவர் சைமன் தர்மராஜ் தலைமையிலும்,  வடக்கூர் பரி பேட்ரிக் இணை பேராலயத்தில் திருப்பணிவிடையாளர் யோபு ரத்தினசிங் தலைமையிலும், சண்முகபுரம் பரி பேதூரு ஆலயத்தில் திருப்பணிவிடையாளர் செல்வின்சார்லஸ் தலைமையிலும், ஆசிரியர் காலனி பரி.திருத்துவ ஆலயத்தில் சேகர குரு மைக்கேல்ராஜ் தலைமையிலும், சாயர்புரம் சி.எஸ்.ஐ.திருத்துவ ஆலயத்தில் குருவானவர் குரோவ்ஸ்பர்னபாஸ் தலைமையிலும் ஆராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி: சாம்பல் புதனை யொட்டி கோவில்பட்டி புனித வளனார் ஆலயத்தில் நேற்று சிறப்பு திருப்பலி நடந்தது. ஆலய பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ், உதவி பங்குத்தந்தை மிக்கேல் பெலார்மின் ஆகியோர் இணைந்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர். தொடர்ந்து ஆலய பங்குத்தந்தை அலோசியர் துரைராஜ் இறைமக்களின் நெற்றியில் சாம்பல் சிலுவை அடையாளம் இட்டார். இதில் கிறிஸ்தவ பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

  குளத்தூர்:  தருவைகுளம் தூயமிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் நேற்று அதிகாலை சிறப்பு திருப்பலியுடன் குருத்தோலை சாம்பல் கிறிஸ்துவர்களின் நெற்றியில் பூசப்பட்டு தவக்காலத்தை துவக்கினர். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 6 வெள்ளிக்கிழமைகளிலும் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. தொடர்ந்து ஏப்ரல் 21ம் தேதி இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது என பங்குதந்தை எட்வர்ட்ஜே தெரிவித்தார். வைகுண்டம்:  வைகுண்டம் குரூஸ்கோயிலில் நடைபெற்ற சாம்பல் புதன் நிகழ்ச்சியில் காலை 6.15 மணிக்கு பங்குதந்தை மரியவளன் திருப்பலி நிறைவேற்றினார். பின்னர் குருத்தோலையில் எடுக்கப்பட்ட சாம்பலை பக்தர்களின் நெற்றியில் பூசினார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

   நாசரேத்: நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் தவக்கால தொடக்க சிறப்பு ஆராதனை தலைமைகுரு எட்வின் ஜெபராஜ் தலைமையில் உதவிகுரு இஸ்ரவேல் ஞானராஜ் முன்னிலையில் நடந்தது. பிரகாசபுரம் பரிசுத்த பரலோக மாதா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு பங்குத்தந்தை அந்தோணி இருதய தோமாஸ் தலைமையில் நடந்தது. பிரகாசபுரம் தூய  திரித்துவ ஆலயத்தில் சேகரகுருஆல்பர்ட் தலைமையில் சபை ஊழியர் கோயில்ராஜ் முன்னிலையில் தொடக்க சிறப்பு ஆராதனை நடந்தது. மூக்குப்பீறி தூய மாற்கு ஆலயத்தில் சேகரகுரு ஜெரேமியா தலைமையில் சிறப்பு ஆராதனை நடந்தது.  பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில் சேகரகுரு ஜேஸ்பர் அற்புதராஜ் தலைமையிலும் பாட்டக்கரை சி.எஸ்.ஐ. ஆலயத்தில் சேகரகுரு செல்வசிங் தலைமையிலும் தவக்கால சிறப்பு ஆராதனை நடந்தது.   முதலைமொழி தூய அகஸ்டின் ஆலயத்தில் சேகரகுரு ஆண்ட்ரூஸ் தலைமையில் சிறப்பு ஆராதனை நடந்தது. மேலும் வாழையடி, அகப்பைக்குளம், வகுத்தான்குப்பம், வெள்ளரிக்காயூரணி, வெள்ளமடம், ஒய்யான்குடி, கடையனோடை, தங்கையாபுரம், கச்சனாவிளை, நாலுமாவடி, மணிநகர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் தவக்கால தொடக்க சிறப்பு ஆராதனை நடந்தது.

Tags : occasion ,Gray Budan Yanti ,shrines ,Christian ,
× RELATED நுளம்பர் பாணி நுணுக்கத்தூண்கள்