×

எட்டயபுரம் அருகே பாமக ஆர்ப்பாட்டம்

எட்டயபுரம், மார்ச் 7: எட்டயபுரம் பகுதி கீழ்நாட்டுகுறிச்சி கிராமத்தில் சவுடுமண் குவாரி போர்வையில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி பாமக  சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாமக மாநில துணை பொதுசெயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.  மாநில துணை அமைப்பு தலைவர் கருப்பசாமி, செயலாளர் முருகன், மாநில இளைஞரணி முகமதுமைதீன், மகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வினோத்குமார், மத்திய மாவட்ட தலைவர் ஜெபகுமார், தெற்கு மாவட்ட தலைவர் சிவபெருமாள் ஆகியோர் ஆர்பாட்டத்தை விளக்கி பேசினர். எட்டயபுரம் நகர தலைவர் கலைசெல்வம் நன்றி கூறினார்.

Tags : Demonstration ,Ettayapuram ,
× RELATED நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்