×

முருகேசன் பாலிடெக்னிக் கல்லூரியில்

23வது ஆண்டு விழா கொண்டாட்டம்வாழப்பாடி, மார்ச் 6: முருகேசன் பாலிடெக்னிக் கல்லூரியில், 23வது ஆண்டு விழா, மாணவ-மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. வாழப்பாடி அடுத்த கருமாபுரத்தில் செயல்பட்டு வரும் முருகேசன் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டுவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் முருகேசன் தலைமை வகித்தார். 3ம் ஆண்டு மாணவர் ஹரிவிக்னேஷ் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் கேப்டன் புனிதன் ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்நாடு சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளின் கூட்டமைப்பின் மாநில தலைவர் கந்தசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று,  தொழில்நுட்ப பயிற்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு, வேலைவாய்ப்பு, சமூக ஈடுபாடு, வாழ்க்கை முன்னேற்றம் குறித்து விழிப்புணர்வு கருத்துரை வழங்கினார்.இதனைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலைத்திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகள், வாரியத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பாராட்டி, கல்லூரி நிர்வாகி பொருளாளர் மாறன், காரிப்பட்டி கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் அருண், துணை மேலாளர் தினேஷ் ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். முதலாமாண்டு மாணவர் விஷாந்த் நன்றி கூறினார்.

Tags : Murugesan Polytechnic College ,
× RELATED விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம்...