×

அரசு கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

கடலூர், மார்ச் 6: கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி ஆங்கிலத்துறை சார்பில் ‘உலகளாவிய மொழி, இலக்கியம், கலாச்சாரம் மற்றும் விளிம்பு நிலை’ என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜகுமார் தலைமை தாங்கி கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். ஆங்கிலத்துறை தலைவர் டேவிட் சவுந்தர் வரவேற்றார். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக ஆங்கிலத்துறை பேராசிரியர் கிளமண்ட் லூர்து, இந்திய நாவல்களில் காந்தியின் தத்துவங்கள் என்ற தலைப்பில் பேசினார். திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் பெருவழுதிரு சிறப்புரையாற்றி பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

கர்நாடகா மாநிலம் தேவாங்கிர் பல்கலைக்கழக பதிவாளர் கண்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். கடலூர் அரசு கல்லூரி தமிழ்த்துறை தலைவர் குமரன், விழுப்புரம் அரசு கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் ரவிசங்கர், ரவி, வின்சென்ட், பொருளியல் துறை பேராசிரியர் வில்லியம், கடலூர் புனித வளனார் கல்லூரி வணிகவியல் துறைத்தலைவர் சவரிமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர். கருத்தரங்கில் தேசிய அளவிலான பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்பட 400 பேர் பங்கேற்றனர். பேராசிரியர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

Tags : National Seminar ,Government College ,
× RELATED மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் முதியோர்கள் குறித்த தேசிய கருத்தரங்கம்