×

சேந்தமங்கலத்தில் இலவச புற்றுநோய் கண்டறியும் முகாம்

சேந்தமங்கலம், மார்ச் 6: சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் இலவச புற்றுநோய் கண்டறியும் முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவ அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், வாய் மற்றும் தொண்டை புற்றுநோய், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்டவை கண்டறியப்பட்டது.  இதில் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை கண்டறிய மெமோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த முகாமில் மருத்துவர்கள் கருணாநிதி, மணிகண்டன், ஸ்ரீராம் ஆய்வக நிபுணர் சுப்ரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Cancer Diagnostic Camp ,Senthamangalam ,
× RELATED பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை