பிரசவத்தில் குழந்தை இறப்பை முழுவதும் தடுத்துள்ளோம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

திருச்சி, மார்ச் 6:  திருச்சி விமான நிலையத்தில்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி: நிதி ஆயோக் பொறுத்தவரை கடந்த ஆண்டு 3ம் இடத்தில் இருந்த தமிழகம் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரசவத்தில் குழந்தை இறப்பை முழுவதும் தடுத்துள்ளோம். மறைந்த முன்னாள் முதல்வர் அறிவித்த தாய் சேய் நல பெட்டகம் வழங்குவதில், தற்போது, 3 மற்றும் 5ம் மாதத்தில் ஊட்டச்சத்து  நிறைந்த பெட்டகம் வழங்கப்படுகிறது. அதன் மூலம் இந்தியாவிலேயே தமிழகத்தில் பிறக்க கூடிய குழந்தைகள் சரியான எடையுடன் ஆரோக்கியமாக பிறக்கின்றனர்.

இந்தியாவிலேயே இல்லாத அளவில் முதுகலை மருத்துவ படிப்பிற்கு கூடுதலாக 508 இடங்கள் பெற்றிருக்கிறோம். இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் முதுகலை மருத்துவ படிப்பு பயில்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம் என்றார்.

Tags : childbirth ,Minister Wijepabaskar ,
× RELATED குறைந்துவரும் பெண் குழந்தை பிறப்பு விகிதம்!