×

மணப்பாறை அருகே வளநாடு பொன்னர்-சங்கர் கோயில் அறங்காவலர்கள் சஸ்பெண்ட் அறநிலையத்துறை இணை ஆணையர் அதிரடி

மணப்பாறை, மார்ச் 6:  வளநாடு பொன்னர்-சங்கர் கோயில் பரம்பரை அறங்காவலர்களை தற்காலிக பணி நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டார். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம், வளநாட்டில் பொன்னர்-சங்கர் கோயில் உள்ளது. இதன், பரம்பரை அறங்காவலர்களாக திருவேங்கடம் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் இருந்து வந்தனர். இவர்கள் இருவரும் கோயில் நிர்வாகத்திற்கு தெரிவிக்காமல் பொன்னர்-சங்கர் சுவாமிகள் பட்டாபிஷேக விழா மற்றும் திருமண விழா நிகழ்வு நடத்தியும், கோட்டை வளர்ச்சி நிதி என்ற பெயரில் பக்தர்களிடம் பல ஆண்டுகளாக நிதி வசூல் செய்ததாகவும்  கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக, பல புகார்கள் வந்ததை தொடர்ந்து திருச்சி இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் கல்யாணி மற்றும் அற நிலையத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 28ம் தேதியன்று ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இக்கோயில் பரம்பரை அறங்காவலர்களான திருவேங்கடம் மற்றும் சந்திரசேகரன் ஆகிய இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்தும், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார். மேலும், பெட்டவாய்த்தலை மத்யார் ஜீனேஸ்வரர் கோவில் செயல் அலுவலரை வளநாடு பொன்னர்-சங்கர் கோயில் தக்காராக நியமித்தும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.வே.சா. இலக்கிய பேரவை நிறைவு விழா
தா.பேட்டை, மார்ச் 6: முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உ.வே.சா இலக்கிய பேரவை நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் ராஜ்குமார் தலைமை வகித்தார். இணை பேராசிரியர் மஞ்சுளாதேவி வரவேற்றார். தமிழ்துறை பேராசிரியர் ஜெயக்குமார், குறுந்தொகை காட்சிகள் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். முன்னதாக தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதரின் 165வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது உ.வே.சா தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் பற்றியும், பணிகள் பற்றியும் பேராசிரியர்கள் விரிவாக பேசினர். கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Associate Commissioner ,Ponner-Shankar Temple Trustee ,Suspended Temporary Trustees ,Manaparai ,
× RELATED கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு