×

பொறியாளர் பணி திருச்சி-தஞ்சை இடையே ரயில்கள் ரத்து

திருச்சி, மார்ச் 6:  திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடக்கும் பொறியாளர் பணிக்காக நெல்லை-மயிலாடுதுறை ரயில் திருச்சி-தஞ்சை இடையே வரும் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. திருச்சி ரயில்வே கோட்ட பகுதியில் பொறியாளர் பணிகளுக்காக தண்டவாளத்தில் செய்யப்படும் லைன் பிளாக் காரணமாக பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ரயில் எண்.76824/76827 திருச்சி-தஞ்சை-திருச்சி பயணிகள் ரயில் வரும் 9ம் தேதி 16ம் தேதி, 23ம் தேதி மற்றும் 30ம் தேதி ஆகிய நான்கு நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் ரயில் எண்.56822/56821 நெல்லை-மயிலாடுதுறை-நெல்லை பயணிகள் ரயில் திருச்சி-தஞ்சை இடையே இன்று முதல் வரும் 31ம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

அதே போல் ரயில் எண்.16234 திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் பூதலூர்-ஆலங்குடி இடையே தவறான பாதையில் இயக்கப்பட்டு 60 நிமிடம் தாமதமாக மயிலாடுதுறைக்கு வந்தடையும் வகையில் இன்று முதல் வரும் 23ம் தேதி வரை இயக்கப்படுகிறது.    ரயில் எண்.56824 திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரயில் ஆடுதுறையில் இன்று முதல் 23ம் தேதி வரை 75 நிமிடம் கட்டுப்படுத்தப்படுகிறது. அதே போல் ரயில்் எண்.56824 திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் கும்பகோணத்தில் வரும் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை 75 நிமிடங்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.

Tags : Engineer ,Tanjore ,Trichy ,
× RELATED தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 2வது நாளாக வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை