×

குமாரசாமிபேட்டை அங்காளபரமேஸ்வரி கோயில் விழாவில் பால்குட ஊர்வலம்

தர்மபுரி, மார்ச் 6: தர்மபுரி குமாரசாமிபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் விழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது. தர்மபுரி டவுன் குமாரசாமிபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மயான கொள்ளை பெருவிழா, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3ம் தேதி பூமிதி திருவிழா நடந்தது. 4ம் தேதி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று 5ம் தேதி விழாவையொட்டி நான்குரோடு விநாயகர் கோயிலில் இருந்து ஏராளமான பெண்கள், பால்குடத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக புறப்பட்டு சென்று கோயிலை அடைந்தனர். அங்கு அங்காளபரமேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து அங்காள பரமேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7மணிக்கு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதையடுத்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நாளான 6ம் தேதி காலை 11 மணிக்கு, அங்காளபரமேஸ்வரி அம்மன் அலங்காரத்துடன் பூதவாகனத்தில் மயானம் சென்று மயான கொள்ளை நடக்கிறது. 8ம் தேதி கொடியிறக்கம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


Tags : Kumarasamy Patti Angalaparameswari Temple ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா