×

மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

அரூர், மார்ச் 6: அரூர் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள  வாணீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோயிலில் நான்கு கால பூஜைகள் நடந்தது.
முதற்கால யாக பூஜையுடன் மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடந்தது. பஞ்சகவ்வியம், அரிசி, வில்வம், தாமரை, அரலி ஆகியவை முதல்கால யாக பூஜைக்கு பயன்படுத்தப்பட்டது. அதே போல், 2ம் கால் யாக பூஜை 11 முதல் 12 மணி வரையும், 3ம் கால பூஜை 2 மணி முதல் 3 மணி வரையும், 4ம் கால யாக பூஜை அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையும் நடந்தது. அந்தந்த காலத்திற்கு ஏற்ற வஸ்திரம், நிவேத்தியம், அபிஷேக பொருட்கள் பயன்படுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் இருந்து 4 கால பூஜைகளிலும் பங்கேற்றனர். அர்ச்சகர்கள் நாகராஜ், ஜெகதீஸ்வரன், விஜயகுமார், சுதர்சனன் ஆகியோர் பூஜைகளை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் வழிபாட்டு சங்கத்தினர் செய்திருந்தனர். மகா சிவராத்திரியை ஒட்டி சென்னை ஆச்சார்யா நடனப்பள்ளி, அகல்யா நடன குழுவினர் 8 பேரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 3 பேர் நடனமாடினர். நாட்டியாஞ்சலிக்கான ஏற்பாடுகளை, அரூர் இனியா பல்மருத்துவமனை மருத்துவர் சுரேஷ்குமார் செய்திருந்தார்.

Tags : Natyanjali ,Maha Shivaratriya ,
× RELATED காந்தி ஜெயந்தியையொட்டி கல்லணையில் நாட்டியாஞ்சலி-1,000 கலைஞர்கள் பங்கேற்பு