×

600 கோயில்களில் சிவராத்திரி விழா பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்

திருமங்கலம், மார்ச் 6: திருமங்கலம் சப்டிவிசனில் 600க்கும் மேற்பட்ட கோயில்களில், ஒரே நாளில் சிவராத்திரி விழா நடந்ததால், பொதுமக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
திருமங்கலம் சப்டிவிசனில் திருமங்கலம் டவுன், தாலுகா, கள்ளிக்குடி, சிந்துபட்டி, கூடக்கோவில், பெருங்குடி, ஆஸ்டின்பட்டி, திருமங்கலம் மகளிர் காவல்நிலையங்கள் என 8 காவல்நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு காவல்நிலைய கட்டுப்பாடில் உள்ள 20 முதல் 30 கிராமங்கள் உள்ளன.இந்த டிவிஷனில் போலீசார் பற்றாக்குறை உள்ளது. நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் மகாசிவராத்திரி விழா களைகட்டியது.
குறிப்பாக சாத்தங்குடி கிராமத்தில் மட்டும் 60க்கும் மேற்பட்ட கோயில்களில் சிவராத்திரி விழா நடைபெற்றது. இதில், கலந்து கொள்ள பக்தர்கள் காலை முதல் வந்தவண்ணம் இருந்தனர்.இதேபோல் கள்ளிக்குடி, குராயூர், திடியன், நாட்டாமங்கலம், பொன்னமங்கலம், வாகைகுளம், உரப்பனூர் உள்ளிட்ட பெரிய கிராமங்களில் குலதெய்வ வழிபாட்டிற்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோ குவிந்தனர். இந்நிலையில், பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.இது குறித்து போலீசார் கூறுகையில், ‘திருமங்கலம் சப்டிவிஷனுக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள 600க்கும் மேற்பட்ட கோயில்களில் நேற்று முன்தினம் இரவு மகாசிவராத்திரி விழா நடைபெற்றது.
திருமங்கலம் சுற்றுவட்டாரத்திற்கு செல்வோர் பஸ்நிலையத்தில் ஒரே நேரத்தில் குவிந்ததால் கூட்டம் நிரம்பிவழிந்தது. இனி வரும் ஆண்டுகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : Shivaratri ,temples ,festival ceremonies ,
× RELATED கன்னியாகுமரி சிவராத்திரியை ஒட்டி 12...