×

பெரியாவுடையார் கோயிலில் மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி

பழநி, மார்ச் 6: சிவராத்திரி விழாவை முன்னிட்டு பழநி பெரியாவுடையார் கோயிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. மாசி மகா சிவராத்திரி முன்னிட்டு பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பழநி பெரியாவுடையார் கோயிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. நாட்டிய பள்ளிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பரத கலைஞர்களால் இரவு முழுவதும் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். துணை ஆணையர் செந்தில்குமார், சித்தனாதன் சன்ஸ் சதீஸ்குமார், சாய் மருத்துவமனை நிர்வாகி சுப்புராஜ், டிஎஸ்பி விவேகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறந்த நடன கலைஞர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மாத மகா சிவராத்திரி விழா நடந்தது. இதையொட்டி அங்குள்ள முருக பெருமானுக்கு மேளதாளம் முழங்க சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடந்தது. இதில் பக்தர்கள் நெய் விளக்கேற்றி சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர். அருகிலுள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

Tags : Maha Sivarathri Natyanjali ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்