×

நத்தம் கோயில்களில் சிவராத்திரி விழா

நத்தம், மார்ச் 6: நத்தம் கோவில்பட்டியில் பிரசித்திபெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. இதையொட்டி செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து விசேஷ யாகபூஜைகளும், மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதைபோலவே முப்புலிகருப்பு கோவிலிலும் பூஜைகளும், யாகங்களும் நடந்தது. இங்கும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.மேலும் செல்லப்பநாயக்கன்பட்டியில் உள்ள குட்டகருப்பு, வேம்பத்தூர் கருப்புசுவாமி, அதியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிவராத்திரி பூஜை விழா நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Shivaratri ,festival ,temples ,Natham ,
× RELATED அம்மன் கோயில்களில் ஜாத்திரை விழா