×

வலங்கைமான் அருகே கண்டியூரில் முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டில் நள்ளிரவில் 14பவுன் நகை கொள்ளை தூங்கி கொண்டிருந்த பெண்களிடம் கைவரிசை

வலங்கைமான், மார்ச் 6: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த கண்டியூர் பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன்(60). இவர் முன்னாள் ஊராட்சித் தலைவர். திருமணமாகி பிரசவத்திற்காக அவரது மகள் சிந்துஜா  காரைக்காலில் இருந்து கண்டியூருக்கு கடந்த சிலதினங்களுக்கு முன்  வந்துள்ளார்.
இந்நிலையில்  நேற்று இரவு வீட்டில் குடும்பத்துடன்  தூங்கி கொண்டிருந்தார். அப்போது   வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் வைத்தியநாதனின் மனைவி அனுசியா அணிந்திருந்த 8  பவுன்  செயினையும் ,அவரது மகள் சிந்துஜா  அணிந்திருந்த 6 பவுன்  தாலி  செயினையும் அறுத்துக் கொண்டு தப்பி  சென்றனர். அப்போது அவர்கள் விழித்து பார்த்தபோது 4 மர்மநபர்கள் தப்பித்து சென்றது தெரியவந்தது.

மேலும் சம்பவ இடத்திற்கு திருவாரூர் எஸ்பி துரை, நன்னிலம் டிஎஸ்பி முத்தமிழ்செல்வன், வலங்கைமான் இன்ஸ்பெக்டர்(பொ)ராஜகோபால் உள்ளிட்டோர் வந்து  விசாரணை மேற்கொண்டனர்.  சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ராக்சி கொண்டு வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தடயவியல் நிபுணர் சரவணன் தடயங்களை சேகரித்தார். இதுகுறித்து வைத்தியநாதன் கொடுத்த புகாரின் பேரில்  வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து  பெண்களிடம் செயினை திருடி சென்ற மர்மநபர்களை  தேடி வருகின்றனர்.

Tags : head ,Panchayat headquarters ,Kandur ,Valangaiman ,women ,
× RELATED உலகின் முதன்முறையாக ரோபோக்கள் மூலம்...