×

இந்தியாவிலேயே பிறவி மருந்தீசர் கோயிலில் மட்டுமே நடராஜர் சிலை முன் நாட்டியாஞ்சலி

திருத்துறைப்பூண்டி, மார்ச் 6: இந்தியாவிலேயே திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் கோயிலில் மட்டும் தான்  நடராஜர் சிலைக்கு எதிரே நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன் தினம் மாலை துவங்கிய நாட்டியாஞ்சலி அதிகாலை வரை நடைபெற்றது. இதில் சிங்கப்பூர், பெங்களூர், அமெரிக்கா, சென்னை, மும்பை, நாகை, அரியலூர், திருச்சி பகுதிகளில் இருந்தும், தமிழ்நாடு மட்டு மல்லாது வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த 22 குழுவினரின் நாட்டியாஞ்சலி செலுத்தினர். கடந்த 3 நாட்களாக நடைபெற்ற நாட்டியாஞ்சலிக்கு 50க்கு மேற்பட்ட  நாட்டியாஞ்சலி குழுவில் பங்கேற்ற நடனகலைஞர்கள் 400 க்கு மேற்பட்டோருக்கு பொன்னாடை போர்த்தி சான்றிதழ் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள சிவன் கோயில்களில் மகாசிவராத்திரி நாட்டியாஞ்சலி  விழா நடைபெறுவது வழக்கமானஒன்றாகும். பெரும்பாலான கோயில்களில் கோயில் வளாகத்தில்தான் நாட்டியாஞ்சலிவிழா நடைபெறுகிறது.திருத்துறைப்பூண்டியில் மட்டும்தான் நடராஜர் சன்னதிக்கு நேர் எதிரே அமைக்கப்பட்டுள்ள அரங்கில் நாட்டியாஞ்சலிநடைபெற்றது சிறப்பு வாய்ந்ததாகும்.இதில் பங்குபெற்ற நாட்டிய கலைஞர்கள் திருத்துறைப்பூண்டியில் நடராஜருக்கு எதிரேநடனமாடுவது சக்திவாய்ந்ததாகும் என்றனர். இதனால் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் நடனகலைஞர்கள் திருத்துறைப்பூண்டி பிறதி மருந்தீசர் கோயிலில் நடைபெறும்  மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலியில்  பங்குகொள்ள விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Natarajar ,India ,
× RELATED சிதம்பரம் கோயிலில் உள்ள கோவிந்தராஜ...