×

அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு திருச்சிற்றம்பலத்தில் இன்று நடக்கவிருந்த விவசாயிகளின் உண்ணாவிரதம் வாபஸ்

பேராவூரணி, மார்ச் 6: கஜா புயல் கடந்தாண்டு நவம்பர் 16ம் தேதி அதிகாலை கரையை கடந்தது. இதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை, உட்பட பல்வேறு பகுதிகளில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு நிவாரணத்தொகையை தமிழக அரசு வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் வருவாய் சரகத்தில் உள்ள மடத்திக்காடு, உப்புவிடுதி ஆகிய 2 கிராமங்களில் பாதிக்கப்பட்ட பெரும்பாலான தென்னை விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை கிடைக்கவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் இன்று (6ம் தேதி) சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் புயலால் பாதித்த விவசாயிகளிடம் பட்டுக்கோட்டை ஆர்டிஓ தனப்பிரியா பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் திருச்சிற்றம்பலம் இன்ஸ்பெக்டர் ஆனந்தி வேதவள்ளி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். அப்போது புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் ஒரு வாரத்துக்குள் நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்டிஓ தனப்பிரியா உறுதியளித்தார். இதனால் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் இன்று நடக்கவிருந்த சாலை மறியல் போராட்டத்தை தென்னை விவசாயிகள் வாபஸ் பெற்றனர்.

Tags : hunger strike ,negotiations ,occasion ,
× RELATED மாநிலங்களவை சீட் வேண்டும் என்பதில்...