×

அறந்தாங்கி கோயில்களில் மகாசிவராத்திரி விழா திரளான பொதுமக்கள் தரிசனம்

அறந்தாங்கி,மார்ச்6: அறந்தாங்கி பகுதி கோயில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் விழித்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மகாசிவாராத்திரியை முன்னிட்டு, சிவன் மற்றும் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் விடிய, விடிய நடைபெற்றன. அறந்தாங்கி அக்ரஹாரம் விசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிசேக ஆராதணைகள் நடை பெற்றன.

மகாசிவராத்திரியை முன்னிட்டு மகா தீபாராதணை நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் விடிய, விடிய கோவிலில் இருந்து இறைவனை வழி பட்டனர். இதே போல அறந்தாங்கி அன்னபூரணி அம்பாள் சமேத ராஜேந்திர சோழீஸ்வரர் கோவில், எரிச்சி காசிவிஸ்வநாதர் கோவில், தினையாகுடி காமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் மகாசிவராத் திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடை பெற்றன.

Tags : Mahashivarathri Festival ,temples ,Aranthangi ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு