×

பிலாவிடுதி அரசு பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் விழா

கறம்பக்குடி, மார்ச் 6:  புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பிழாவிடுதி ஊராட்சி பிளாவிடுதி அரசு ஆதி திராவிடர்  உயர் நிலைப்பள்ளியில் கல்விசீர் வழங்கும் விழா நடைபெற்றது.  இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சந்திர ஜோதி தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தீபா மோகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கணேசன், ஊராட்சி துணை தலைவர் தங்கமணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் இந்திராகாந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி பள்ளிக்கு தேவையான மேஜை, பீரோ,

நாற்காலிகள், மைக், கடிகாரம், கணினி  விளையாட்டு பொருட்கள், எழுது பொருட்கள் மற்றும் பல்வேறு பொருட்களை எடுத்து வந்தனர். அவர்களை தலைமை ஆசிரியர் தலைமையில் ஆசிரியர் ஆசிரியைகள் வரவேற்றனர். விழாவில்  பெற்றோர்  ஆசிரியர் கழக தலைவர் குணசீலன், பள்ளி மேலாண்மை குழு வளர்ச்சி தலைவர் பாண்டியன், அம்புகோவில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜன், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Pilgrimage ceremony ,school ,
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி